மார்பக வளச்சி
வடிவ அமைப்பியல் படி மார்பகம் ஒரு கூம்பாகத் தளத்தில் மார்புச்சுவரையும், நுனியில் முலைக்காம்பையும் கெண்டிருக்கிறது. மேலோட்டமான இழையப்படலத் தோலில் இருந்து கொழுப்பிழையத்தில் 0.5 முதல் 2.5 செ.மீ., வரைப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாரிழையமான கூப்பரின் தொங்கித் தசைநார்கள் மேலோட்டமான இழையப்படலத்திலிருந்து தோலுறை வரைப்பரவி நீட்டிக்கின்றது. வயது வந்தோரின் மார்பில் 14 முதல் 18 ஒழுங்கற்ற பாற்சுரக்கும் மடல்கள் காம்பிலும், நாளங்களிலும் 2.0 முதல் 4.5 மிமீ விட்டம் வரை ஒருங்கிணைத்துக் காணப்படுகிறன. பாற்நாளங்கள் உடனடியாக ஒர் ஆதரவுக் கட்டமைப்பைச் செயல்படுவதற்கு அடர்ந்த இணைப்பிழையத்தால் சூழப்பட்டுள்ளன. மார்பகத்தில் சுரப்பிழைய உயிர்வேதியியல் படி ஈஸ்ட்ரோஜனை ஆதரிக்கின்றது; இதனால், ஒரு பெண் மாதவிடாய் நிறுத்தம் அடையும் போது, அவளினுடல் எஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது; பாற்சுரப்பிழையம் பின்னர் மெலிந்தும், உலர்ந்தும் மறைந்துவிடும்; இதன் விளைவாக மார்பகம் கொழுப்பிழையத்தையும், மேலோட்டமான இழையப்படலத்தையும், தொங்கித் தசைநார்களையும், தோலுறையையும் கொண்டிருக்கும்.
மார்பகத்தின் பரிமாணங்களும், எடையும் பெண்கள் மத்தியில் வேறுபடுகின்றன; ஒவ்வொன்றும் சுமார் 500 முதல் 1,000 கிராம்கள் வரை எடை கொண்டது. ஒரு சிறு நடுத்தர அளவுள்ள மார்பகம் 500 கிராம்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ எடையுடையது; ஒரு பெரிய மார்பகம் சுமார் 750 முதல் 1000 கிராம்கள் வரை எடையுடையது. மார்பகத்தில் இழைய அமைப்பு விகிதங்களும் இதேபோல் பெண்கள் மத்தியில் வேறுபடுகின்றன; சில மார்பகங்களில் கொழுப்பிழையமோ, இணைப்பிழையமோ சுரப்பிழையத்தை விட அதிகவிகிதத்திலோ, குறந்தவிகிதத்திலோ இருக்கும்; எனவே, கொழுப்பு, இணைப்பு இழையங்களின் விகிதம் மார்பகத்தின் அடர்த்தியைத் (உறுதியைத்) தீர்மானிக்கிறன.
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாதையில் பருவமடைந்து மார்பகம் வளர்வதிலும், மாதவிடாயிலும், கருவுற்ற நிலையிலும், ஒரு குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டலிலும், மாதவிடாய் நிறுத்தத்திலும் தன்னுடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளது மார்பகங்களின் அளவும், வடிவமும், எடையும் மாற்றமடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக