ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை  மூலிகை மருத்துவம் 

வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்

நன்னாரி

 

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.
*
இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
*
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).
*
நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.
ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.
மருத்துவ குணங்கள்:
1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக…
*
2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
*
3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.
*
4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.
*
5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
*
6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .
*
7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
*
8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
*
9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.
*
10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
*
11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
*
12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
*
13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
*
14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
*
15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
*
16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.
*
17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
18. குறிப்பு:
ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
thanks விக்கிபீடியா.
நன்னாரி–கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
நன்னாரி
சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.
கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்’ என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.
உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.
நன்னாரி பால்:
1. நன்னாரி – 200 கிராம்
2. சுக்கு – 50 கிராம்
3. ஏலக்காய் – 25 கிராம்.
செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.
நன்னாரி சர்பத்:
நன்னாரி – 200 கிராம்.
தண்ணீர் – ஒரு லிட்டர்.
சர்க்கரை – 1 கிலோ.
எலுமிச்சம்பழம் – 6 (சாறு எடுத்து கொள்ளவும்).
செய்முறை:
1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.
3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.
4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.
தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.
மெயிலில் வந்தவை
நல்ல நாற்றம்  உடையதால் நன்னாரி ஆனது போலும் .
நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள் .அதே சமயம் அதிக மருத்துவகுணங்களும்
கொண்டது .
இதை மருத்துவ நூல்களில் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி என்றும் அழைக்கப்படுகிறது
.. இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது்.
இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு
மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள்
வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா
நிறம்) இருக்கும்.
மாவலி கிழங்கு என மலை பிரதேசங்களில் இருந்து ஒருவகை  கிழங்கு  கொண்டுவந்து
விற்ப்பார்கள் .
அதில் ஒருவித ஊறுகாய் செய்து  வெகுவாக பயன்படுத்துவார்கள் .அதுவும் ஒருவகை
பெரு நன்னாரி என்னும் வகையின் வேர் ஆகும் .
இதன் வகை பலவகை உண்டு – நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.
இது  இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின்
மேற்புறம்  கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும்,
வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.
. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து
உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.
முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால்
எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம் .
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு
வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை
தீரும். நீண்ட நாள்  தொடர்ந்து சாப்பிட  நரை மாறும்.
பச்சைவேரை சிறிது இடித்து   நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை
குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக
பசி, மேக நோய் தீரும்.    ஆனால் பத்தியம்  மிக அவசியம்.
ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை  இளஞ்  சூடாக அருந்தி வரவேண்டும். .
இது ஒரு இயற்க்கை  தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி
உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும்,
சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட
இருமலும்  நிற்கும்.
பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது
கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி
ஊறுகாய் எனப்படும்
.சித்தமருத்துவத்தில் நன்னாரி  லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப்
படுகிறது.

மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத
இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை
நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில்
போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல
பலம் கிடைக்கும்
கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை  தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது
.இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய
துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும்
மனதிற்கும் குளுகுளு .
காசிற்க்கும் கேடில்லை .
தமிழக அரசின் டாம்ப்கால்’ நிறுவனம் துளசி, நன்னாரி, அதிமதுரம் கலந்த மூலிகை
குடிநீரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
நல்ல வியாபாரம் செய்யப் பார்த்திருப்பவர்களுக்கு நன்னாரி குடிநீர் நல்ல ஒரு
வாய்ப்பு ! அறிமுக கட்டணம் மட்டும்  எனக்கு
தர மறந்து விடாதீர்கள் .
கோடையில் குளிர்ச்சி நன்னாரி
நன்னாரி ‘சர்பத்’ கோடையில் உடலை குளிர வைக்கும் பானம். கொதிக்கும் வெய்யிலை தாங்கக்கூடிய சக்தியை அளிக்கும் ஒரு மூலிகை.
நன்னாரி ஒரு வாசனையுள்ள தாவரம்.
சமஸ்கிருதம் – ஸல்ஸா, சரிவா
தமிழ் – நன்னாரி
தெலுங்கு – கடி சுகந்தி
கன்னடம் – நாமத பேரு
ஆயுர்வேதத்தில் நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்வதுண்டு.
பொது குணங்கள்- ஆயுர்வேதப்படி நன்னாரி, மதுர ( இனிப்பு) குணமும் கசப்பும் இணைந்தது. கனமானது. குளிர்ச்சியூட்டும். பசியின்மை, உணவு கசப்பது, இருமல், ஜுரம், உதிரப் போக்கு, இவற்றுக்கு நல்லது.
குணங்களும், பயன்களும்
நன்னாரி செடியில், வேர்களுக்குத்தான் முக்கியத்துவம். இதன் இலை, கொடி, காம்பு எதிலும் நறுமணமில்லை. மருத்துவ பயன்களும் இல்லை. நன்னாரி இனிப்பானது. எரிச்சலை குறைத்து சமனப்படுத்தும்.
வியர்வையை உண்டாக்கி, உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர் பிரிய உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.
நன்னாரி சேர்க்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம், சந்திரனஸவா போன்றவை.
தாவர விவரங்கள்
நன்னாரி படரும் புதர்ச் செடி/ கொடி. கங்கை சமவெளி, அஸ்ஸாம், மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்தியாவும் வளரும். நன்னாரி விஞ்ஞான ரீதியாக பயிரிடப்படுவதில்லை. ஆனால் பரவலாக காட்டுச் செடியாக வளருகிறது. சரியான முறையில் பயிரிட்டு வளர்த்தால், இந்த மூலிகை மேலும் மேன்மையாகும்.
நன்னாரி வேர் – புதிய வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காரணம் அல்டிஹைட். முதிர்ந்த வேர்களில் நறுமணம் குறைவு.
நன்னாரி குடும்பத்துடன் பரவல்லி, கிருஷ்ண சரிவா மற்றும் மாகாளி கிழங்கு  சேர்ந்தவை.
நன்னாரியின் இதர பயன்கள்
1. நன்னாரியின் வேரை உபயோகித்து செய்யப்படும் “சர்பத்” உடல் சூட்டை தணிக்கும். கோடையில் சிறந்த பானமிது.
2. சுத்தம் செய்து நன்னாரியை ஊற வைத்த ( 24 மணி நேரம்) தண்ணீரை அரை கப் காலை; மாலை குடித்து வர, பித்த நோய், தாகம், மேக நோய், நீரிழிவு இவை குறையும்.
3. நன்னாரி வேரை கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால், வாதம், பித்தம், பக்கவாதம், பாரிச வாதம் இவை விலகும்.
4. உடல் சூட்டை தணிப்பதால், நன்னாரி நீருடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து குடித்து வர, ஆரோக்கியம் அதிகரிக்கும்.
5. யூனானி வைத்திய முறையில் ரத்த சுத்திகரிப்புக்கு நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை

 

ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை-அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன் .
Botonical name-withania somnifera .


சீமை அமுக்கிரா & நாட்டு அமுக்கிரா என்று வகை இரண்டுண்டு.இதில் சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது..
மூலிகை வயாக்ரா-என்ற பெயரும் உண்டு.
இந்திய ஜின்செங் -என்ற பெயரும் உண்டு .


............................கோல 
நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை 
நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.


சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து உண்ண விந்துவை பெருக்கும்.
சமீபகால
ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை 
ஊக்குவிக்கிறது.மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் 
உதவுகின்றது எனவும்உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை 
உற்சாகமாகவும்ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும் திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின்
முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேதமருத்துவத்தில் 
அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமேபயன்படுத்தப்படுகின்றது. 
அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£க மாற்ற பாலைகட்டிப்படுத்த பயன்படுகிறது.
சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பதுகுதிரையின் நாற்றம் என பொருள்படும்

நெல்லிகாய்

அருநெல்லி

கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை .மிக சிறியதாக இருக்கும் .
கரு நெல்லி , எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது , உருண்டையாக இருக்கும் .

இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை அனைத்தும் பயன்தருவது .
சத்துக்கள் விவரம் 

மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60


நெல்லிக்காயில் உவர்ப்பும், புளிப்பும் சேர்ந்து இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புசத்தும் இருக்கிறது. இது உடல் உஷ்ணத்தையும் கட்டுபடுத்தும். ஒரு நெல்லிக்காய் மூன்று நான்கு ஆப்பிளுக்கு சமம் என்கிறது மருத்துவம். 

நெல்லிக்காயை அனைவரும் சாப்பிடலாம். ஆயுளை பலப்படுத்தும். சிலருக்கு வயிற்றில் உஷ்ணம் அதிகமானால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அவர்களுக்க நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணத்தையும், வாய் துர்நாற்றத்தையும் தீர்க்கும். அத்துடன் 

நெல்லிக்காய், இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது நெல்லிக்காய்.


வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து --முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.

மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.
சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.
இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.
நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது. 
இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது. 
வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள்  தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.

நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து  சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம்.  கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.

நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது. 

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.


இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்

 

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள் :-


இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை

(அகத்தியர் குணபாடம்)

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல் 

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.


கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
 
வாழைப்பூ

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சு
வையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

அறுகம்புல்

 

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள்,  ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம்  போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால்  மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக்  குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச்  செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான  மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும்  உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை  மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக