சனி, 20 டிசம்பர், 2014

செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம்



செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம்
      மனஅழுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்காதவர்கள் இல்லை. அந்த அளவிற்கு பெரும்பாலோனோரை ஆட்டிப்படைக்கிறது மனஅழுத்தம். மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த மனஅழுத்தம் தாம்பாத்ய வாழ்க்கையிலும் சரியாக ஈடுபடமுடியாமல் செய்கிறதாம். மனஅழுத்தம் காரணமாக 70 சதவிகிதம் பேர் தாம்பத்ய விளையாட்டில் வெற்றி பெறமுடியாமல் வெளியேறிவிடுகின்றனர் என்று கூறியுள்லென். கவலை, நம்பிக்கையின்மை, வேலைப்பளுவினால் ஏற்படும் சிக்கல் போன்றவையும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. எனவே மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பது டாக்டர் ஜெகதீஸ்யின் அறிவுரையாகும்.

      மனஅழுத்தம் காரணமாக படுக்கை அறையில் சரியாக இயங்கமுடியாமல் போய்விட்டால் அது உங்களின் துணையை பாதிக்கும். அது இல்லற வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கூறும் நிபுணர்கள் உங்களுக்கு உள்ள உளவியல் ரீதியான சிக்கலை வாழ்க்கைத்துணையிடம் பேசி புரியவைக்கலாம் என்கின்றனர். செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் மனஅழுத்தம் பின்னர் குடும்பவாழ்க்கையை குழிதோண்டி புதைத்துவிடும் என்கின்றனர்.
மனஅழுத்தம் கொண்டவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்பிற்குள்ளாவது ஒருபுறம் இருக்க பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்ட நபர்கள் மனஅழுத்தத்திற்குள்ளாவது  டாக்டர் ஜெகதீஸ்யின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலி
யாவில் நடைபெற்ற ஆய்வில் நடைபெற்ற ஆய்வில் கவனக்குறைவாக செக்ஸ் உறவில் ஈடுபட்டவர்கள். காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு கொண்டவர்கள் பலரும் மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற கண்டறியப்பட்டது.

     நீடித்த இன்பம் வேண்டும் என்பதற்காகவும், எழுச்சி நிலைக்காகவும் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை செக்ஸ் உறவை பாதிக்கும் காரணிகளாகின்றன. இதனால் சரியான உச்சநிலை ஏற்படுவதில்லை .

     மன அழுத்தம் காரணமாக தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கலை மருந்து மாத்திரைகளினால் மட்டுமே நீக்கமுடியாது. எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், அபரிமதமான தன்னம்பிக்கையும் இருந்தால் மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடலாம் டாக்டர் ஜெகதீஸ்யின் அறிவுரையாகும்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

வயாகரா




வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த இயற்கை உணவு
 


          வயாகராவிற்கு இணையான சக்தி வாய்ந்த பத்து உணவுகள்!  இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்? இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் மூலம் நல்ல விறைப்புத்தன்மையை வழங்குகின்றன. எனவே பாலுணர்வைத் தூண்டும் வயாகரா போன்றவற்றின் கீழ் இவை வருவதோடு, இவை விறைப்புத் தன்மைக்கு உதவும் உணவுகளின் கீழும் வரும். காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!! சரி, வயாகராவைப் போன்ற மிகச்சிறந்த சக்திவாய்ந்த இந்த பத்து வகை உணவுகளை இப்போது பார்க்கலாமா?

தர்பூசணி சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தர்பூசணிப் பழங்கள் பாலுணர்வைத் தூண்டுவதில் வயாகராவைப் போன்று சக்தி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது. தர்பூசணி பழத்தின் தோல் பகுதிக்கு மேலுள்ள வெள்ளை நிறப்பகுதி சிட்ரூலைன் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இது உடம்பில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் அமிலங்களை சுரக்கச் செய்கிறது. நைட்ரிக் அமிலம் ஆண்களில் பாலுணர்வைத் தூண்டவும், விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவும் பொருட்களில் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வால்நட் வால்நட்ஸ்கள் விறைப்புத்தன்மைக்குப் பெயர் போனவை. இவற்றில் ஒமேகா-3 அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. இது விந்தணுவின் தரத்தை உறுதிசெய்வதுடன் ஆணின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

முட்டை நல்ல விறைப்புத்தன்மைக்கு முட்டைகள் சிறந்த ஒரு தீர்வு. இதில் உள்ள வைட்டமின் டி, பி5 மற்றும் பி6 ஆகியவை பாலுணர்வை மிகச்சிறந்த வகையில் தூண்டுவதுடன் ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும் செய்து உங்கள் துணையுடன் நீங்கள் இணையும் நேரத்தை மிகவும் மகிழ்வுறச்செய்கிறது.

பசலைக்கீரை உலகின் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படும் இந்த கீரை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் வயாகராவைப் போன்று செயல்படவும் செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை இந்த உணவை இயற்கை வயாகராவாக ஆக்கியுள்ளது.

டார்க் சாக்லெட் டார்க் சாக்லெட் எனப்படும் கருப்பு சாக்லெட் மன அழுத்தத்தைக் குறைத்து உணர்வினை ஊக்குவிக்கிறது. இது நல்ல உணர்வுகளைத் தருவதுடன் உணர்ச்சிகளையும் அதிகரிக்கவல்லது.

வாழைப்பழம் வாழைப்பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ப்ரோமலைன் எனப்படும் வேதிப்பொருள் ஒருவருடைய பாலுணர்வைத் தூண்டக்கூடியது. இதில் மேலும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பாலுணர்விற்கு உதவும் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

அவகேடோ இந்தப் பழங்கள் பல்வேறு சத்துக்கள் கொண்ட உணவுகளில் முன்னணியில் உள்ளது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட மேலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் நல்ல சக்தியை அளிக்கிறது. ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சத்துக்கள் உதவுகின்றன.
ஏலக்காய் ஏலக்காயும் பாலுணர்வு ஊக்க உணவுகளின் பட்டியலில் முதலில் உள்ளது. இதில் உள்ள சினியோல் எனப்படும் பொருள் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். விறைப்புத்தன்மையை அதிகரிக்க மிகவும் சிறந்த உணவுப்பொருள் இந்த ஏலக்காய்.

மாதுளை மாதுளம் பழம் வயாகரா போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு ஆரோக்கியமான சத்துக்களையும் கொண்டுள்ளது. மாதுளம் பழம் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், இரத்தத்தை பிறப்புறுப்புகளை நோக்கிப் பாயச்செய்யும். வியர்த்து விறுவிறுக்க வைக்கும் அந்த இனிமையான தருணங்களுக்கு இந்த பழம் ஏற்றது.

அஸ்பாரகஸ் ஃபோலேட் எனப்படும் வேதிப்பொருளும், வைட்டமின் -யும் நிறைந்துள்ள இந்தப் பழம் வயாகராவைப் போன்று செயல்பட வைக்க உதவுவதோடு, பெண்களின் இனப்பெருக்க இயல்புகளைக் கூட்டவல்ல மிகச்சிறந்த ஒன்று. இதில் நிறைந்துள்ள உயிர்ச்சத்துக்கள் பல்வேறு நலன்களையும் உடலிற்குத் தருகிறது. அப்ப என்ன! இயற்கையான வழியில் புகுந்து விளையாட நீங்கள் தயாரா! இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...